Best Temporary 10 Minutes Mail | Advantages of 10 Minutes Mail Website

தற்போது உலக அளவில் ஆன்லைனில் பல வகையிலான ஏமாற்றும் நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையிலான நிறுவனங்களிடமிருந்து சாதாரண மக்கள் தப்பிப்பது தற்போது மிகவும் கடினமானதாக உள்ளது. சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட குழுக்களை உருவாக்கி, அந்த குழுக்கள் சாதாரண மக்களின் சமூக வலைதளங்களினை பின் தொடர்ந்து அவர்களுக்கு தேவையில்லாத பொருட்களையும், தேவை உள்ள பொருள் என்ன நம்பி அந்தப் பொருளை வாங்க வைப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய வைப்பது போன்ற நிகழ்வுகளை தற்போதுள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய வளர்ந்த நிறுவனம் வரை அனைத்து நிறுவனங்களும் இந்த வேலையை செய்கின்றனர். இந்த வகையான நிறுவனங்களிடமிருந்து சாதாரண மக்கள் தப்பிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க எந்தவித முயற்சிகள் எடுத்தாலும், அத்தனை முயற்சிகளும் தோல்வியில் தான் முடிவடைகின்றன.


Here we are going to clearly see the website that gives us the best ten minute web address and their benefits.

10 Minutes Mail


சாதாரண மக்களின் மின்னஞ்சல் (Email address) முகவரியினை பலவகையான நிறுவனங்கள் சேகரித்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விளம்பரங்களை அனுப்புவது என வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மின்னஞ்சல் முகவரிதான் (Email address) பல வகையிலான சமூக வலைத்தளங்களினை உருவாக்குவதற்கு ஒரு முக்கியமான திறவுகோலாக உள்ளது. அப்படிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு நிறைய மக்களுக்கு விளம்பரங்கள் அல்லது தேவையற்ற தகவல்கள் வருவது பிடிக்காது.

அப்படிப்பட்ட மக்களுக்கு நாம் இங்கு பார்க்கபோகும் இரண்டு வலைதளங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். அந்த இணையதளங்கள் உங்களுக்கு ஒரு தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியினை தரும். அந்த மின்னஞ்சல் முகவரி ஆனது வெறும் பத்து நிமிடத்திற்கு மட்டுமே உபயோகிக்க முடியும். அந்த பத்து நிமிடங்கள் கழித்து வேறு ஒரு மின்னஞ்சல் முகவரி தானாகவே அந்த வலைதளங்கள் உருவாக்கிக் கொள்ளும். 

இவ்வாறு உருவாகும் மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்துவிதமான தகவல்களும் (Including OTP) அந்தப் பத்து நிமிடத்திற்கு சரியாக வந்து சேரும். இந்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி பலவிதமான செயல்களை செய்ய முடியும்.

முக்கியமாக நமது தகவல்களை திருட முயற்சிக்கும் பலவகையான நிறுவனங்களிடமிருந்து நம்மை பாதுகாக்க ஒரு வழிகாட்டியாக அமைகின்றது. 

இந்த 10 நிமிடம் மட்டுமே உபயோகிக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு வரையறை என்று ஒன்றும் கிடையாது. எவ்வளவு மின்னஞ்சல் முகவரி (Email address) வேண்டுமானாலும் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை (Email address) பயன்படுத்தி சிலவகையான சமூக வலைதளங்களை உருவாக்கவும், நமது தகவல்களை பாதுகாக்கவும் மற்றும் பல வகையிலான வேலைகளை பாதுகாப்பாகவும் செய்து முடிக்க உபயோகிக்க முடியும்.

இப்படிப்பட்ட 10 நிமிடம் மட்டுமே உபயோகிக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பயன்படும் மிகச் சிறந்த சில இணையதள முகவரி கீழே உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து வலைதளங்களும், மிக முக்கியமான, இலவச, மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கும் நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஆகும்.

உங்களுக்கு இது போன்று தற்காலிகமான மின்னஞ்சல் முகவரி தேவை இல்லை எனில், பல பிரபலமான முன்னணி நிறுவனங்களான Gmail, Hubspot, Proton Mail, Outlook, Yahoo Mail, Zoho Mail, AOL Mail, GMX Mail, iCloud Mail, Yandex Mail மற்றும் Sendinblue ஆகிய நிறுவனங்கள் உங்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான, இலவசமான மற்றும் கட்டணத்துடன் கூடிய நிரந்தரமான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி தருகின்றனர்.

Post a comment

0 Comments