Best Free Photo Grid Maker for Instagram Online | Image Splitter for Instagram

நாம் அனைவரும் நிறைய விதமான சோசியல் மீடியா அப்ளிகேஷன்களை உபயோகித்து இருப்போம். சோசியல் மீடியா அப்ளிகேசன் என்றாலே நிறைய பேருக்கு முதலில் ஞாபகம் வருவது எதுவென்றால் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் இன்னும் சில.
தற்போது உள்ள மிகப்பிரபலமான சோசியல் மீடியா நிறுவனம் எது என்றால் அது பேஸ்புக். பேஸ்புக் நிறுவனமானது பேஸ்புக் மட்டுமில்லாமல் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் மற்றும் இன்னும் சில நிறுவனங்களை வைத்துள்ளது.

நிறைய அளவிலான பிரபலங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் உபயோகிக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் தற்போது நிறைய அளவிலான புதிய புதிய features அடிக்கடி அப்டேட் மூலமாக தந்து கொண்டே இருக்கின்றார்கள். நீங்க இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் முக்கியமாக நமது இணையதளத்தின் ஆபீஷியல் இன்ஸ்டகிரம் page பின்தொடரவும்.

பெரிய பெரிய பிரபலங்கள் நிறைய அளவில் உபயோகிக்கும் கிரிட் ஸ்டைல் போட்டோவை நமது இன்ஸ்டகிரம் ஆக்கவுண்டிலும் நாம் எளிதில் அந்த முறையில் போட்டோவை அப்லோட் செய்ய முடியும். அது மிகவும் எளிதானதாகும்.
how to split a picture into pieces

Photo Grid Maker


முதலில் grid maker for instagram என்கின்ற அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் சர்ச் செய்து பதிவிறக்கவும் செய்யவும். இல்லையென்றால் நேரடியாக பதிவிறக்க நாங்கள் கீழே உங்களுக்கு இந்த அப்ளிகேஷனின் லிங்க் கொடுத்து உள்ளோம்.


இது வெறும் 5 mb சைஸ் கொண்ட ஒரு மிகச் சிறிய அப்ளிகேஷன் ஆகும். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி இந்த அப்ளிகேஷனிற்கு 4.6⭐ மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்கள். மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் 12 ஆயிரம் பேருக்கு மேல் இந்த அப்ளிகேஷனை பற்றி நல்ல ரிவ்யூ கொடுத்திருக்கின்றார்கள்.

இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்த உடனே ஸ்டோரேஜ் பர்மிஷன் கேட்கும் அதனை ஆன் செய்யுங்கள். பின்பு உள்ளே Grid Maker, Panorama Crop, Square Pic என்கின்ற மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே காட்டப்பட்டிருக்கும். உங்களுடைய போட்டோவை Square ஆக்க வேண்டும் என்றால் மூன்றாவது ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய போட்டோவை செலக்ட் செய்தால் மட்டுமே போதும். Panorama Crop என்பது போட்டோக்களை கிடைமட்டமாக கிராப் செய்யும் ஒரு feature ஆகும்.

முதலில் உள்ள Grid Maker என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் முதலில் உங்களுக்கு விருப்பமான ஒரு போட்டோவை தேர்ந்தெடுக்கவும். பின்பு உங்களுடைய போட்டோவை 3×1, 3×2, 3×3, 3x4, 3x5, 3x6, 3x7, 3x8, 3x9, 3x10, 2x1, 2x2, 2x3 என்ற அளவுகளில் எந்த அளவு வேண்டுமோ அதை கிளிக் செய்ய சொல்லும். இதிலும் உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்யவும்.

பின்பு உங்கள் போட்டோவை நீங்கள் குறிப்பிட்ட அளவு சைஸில் கிராப் செய்து பின்பு கிராப் செய்யப்பட்ட போட்டோவின் மேலே 1,2,3,4,5 என எண்கள் காட்டப்பட்டிருக்கும். அந்த எண்கள் உள்ள போட்டோவை வரிசைப்படி கிளிக் செய்தால் உடனே அவை இன்ஸ்டாகிராமில் உள்ளே சென்று direct, story or feed எனக் கேட்கும். அதில் feed என்பதை கிளிக் செய்தவுடன் நீங்கள் செலக்ட் செய்த போட்டோ இன்ஸ்டாகிராம் இருக்கு உள்ளே போஸ்ட் ஆக மாறும். அதில் உங்களுக்கு தேவையான hashtag, லோகேஷன் மற்றும் டேக்ஸ் ஆகியவற்றை குறிப்பிட்டு நீங்கள் வரிசை வாரியாக இன்ஸ்டாகிராமில் பதிவிடவும்.

இப்போது இன்ஸ்டாகிராம் இருக்கு உள்ளே சென்று பார்த்தால் உங்களுடைய அக்கவுண்ட் மிகவும் மேலே அழகாக மாறிவிடும்.

Advantages


போட்டோக்களின் குவாலிட்டி குறைவதில்லை மற்றும் இந்த அப்ளிகேஷனை உபயோகிப்பது என்பது மிகவும் எளிது. 

Disadvantages


இந்த அப்ளிகேஷனில் நிறைய அளவிலான விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதுவே ஒரு மிகப்பெரும் குறையாகவும் காணப்படுகிறது. மற்றபடி இது grid உருவாக்க இது ஒரு மிகச் சிறந்த அப்ளிகேஷன் ஆகும்.

Post a comment

0 Comments