Free online image background remover | Remove Photo Background

தற்போது உலக அளவில் தினமும் எண்ணற்ற மக்கள் மொபைலில் கேமரா பயன்படுத்துகின்றார்கள். அவர்களில் ‌நிறைய பேருக்கு அவர்கள் எடுத்த போட்டோவின் பேக்கிரவுண்ட் பிடிக்கவில்லை. அதை மறப்பதற்கு நிறைய போட்டோ எடிட்டர் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி எடிட் செய்கிறார்கள். 
அப்படியே செய்தாலும் கூட அவர்களின் போட்டோவின் பேக்ரவுண்ட் மறையாமல் அப்படியே இருப்பதால் வேறு வழியின்றி அப்படியே பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் நானும் இது போன்றே பல போட்டோக்களை எடிட் செய்தேன். அதற்கான தீர்வு என்ன என்று நான் இணையதளத்தில் தேடி பார்த்தேன்.

எனக்கு கிடைத்த மிகச் சிறந்த தீர்வினை பற்றி நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன். அந்தத் தீர்வு, உங்களுடைய போட்டோ களை எடிட் செய்வது அல்ல, மாறாக உங்களுடைய போட்டோக்களில் பேக்கிரவுண்ட் மற்றும் நீக்கி விட முடியும்.

போட்டோவின் பேக்ரவுண்ட் நீக்குவதற்கு பல சாப்ட்வேர்கள் மற்றும் பல வலைதளங்களும் உள்ளன. ஆனால் அவற்றுள் மிகவும் எளிதாகவும், இலவசமாகவும், ஒரே கிளிக்கில் மிகச் சிறந்த முறையில் Photo Background Remove செய்யும் வலைதளத்தினை பற்றி கீழே காண்போம்.

Easiest way to remove image background online

Remove Background from Pictures


உங்களுடைய ஏதாவது ஒரு மொபைல் பிரவுசரில் உள்ளே சென்று அங்கு search-ல் remove.bg அல்லது online image background remover என தேடினால் முதலிலேயே remove.bg என்கின்ற வலைதளம் வரும் அல்லது கீழே கொடுத்திருக்கும் லிங்கை பயன்படுத்தி நேரடியாக அந்த வலைதளத்திற்குள் சுலபமாக செல்லலாம்.


Online picture background remover

மேலே உள்ள போட்டோவில் உள்ளவாறு அந்த வலைதளம் காணப்படும். அங்கு உள்ள அப்லோட் இமேஜ் என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து போட்டோக்களும் காண்பிக்கப்படும். அவற்றில் நீங்கள் எந்த போட்டோவில் background remove செய்ய விரும்புகிறீர்களோ, அந்த போட்டோவை கிளிக் செய்தால் ஒரு வினாடியில் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்யப்பட்ட உங்கள் போட்டோ காட்டப்படும்.

உங்களுக்கு அதில் ஏதேனும் பிழை இருப்பதாக தென்பட்டால், நீங்கள் அந்த இமேஜை மேலும் அந்த வலைதளத்திலேயே பேக்ரவுண்டை சேர்க்கவும், மேலும் நீக்கவும் அல்லது எடிட் செய்யவும் முடியும்.

பிறகு கடைசியாக அந்த போட்டோவிற்கு கீழே டவுன்லோட் என்கின்ற பட்டன் காட்டப்படும். அதை நீங்கள் அழுத்தினாள் உங்களுடைய பேக்ரவுண்ட் நீக்கப்பட்ட போட்டோ உங்கள் கணினி அல்லது மொபைலில் சேமிக்கப்படும். அப்படி சேமிக்கப்பட்ட போட்டோவை உங்களுக்கு வேண்டும் என்கின்ற இடத்தில் அப்படியேவும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது உங்களுக்குப் பிடித்தமான பேக்கிரவுண்டை‌ அந்த போட்டோவில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.


Post a comment

3 Comments