Strong random password generator online | How to choose the strong password?

இன்றைய இணையதள உலகில் எண்ணற்ற அளவிலான வலைதளங்கள், மொபைல் அப்ளிகேஷன்கள், சாப்ட்வேர்கள், இமெயில், சோசியல் மீடியாக்கள் என பலவிதமான முக்கியமான அக்கவுண்ட்கள் உள்ளன.

எல்லா ஆக்கவுண்ட்களிலும் நாம் முக்கியமாக password (கடவுச்சொல்) கொடுத்து இருப்போம். அந்த கடவுச்சொல் இன்னொருவருக்கு தெரிந்தால் கூட அவற்றை வைத்து உங்களுடைய அக்கவுண்ட்டினை அவர்களால் பயன்படுத்த முடியும். எனவே கடவுச்சொல் என்பதே எவ்வளவு மிக முக்கியமானது என்று இதில் இருந்தே நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.

கடவுச்சொல் என்பது மிகவும் வலிமையானதாகவும் மற்றும் நிறைய அளவிலான characters கொண்டிருக்க வேண்டும். ஒரு மிகப் பிரபலமான நிறுவனம் ஒன்று ஒரு பாஸ்வேர்டை கண்டறிய செய்ய எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை அந்த பாஸ்வேர்டு characters வைத்து கணக்கிட்டுள்ளார்கள்.

7 characters 0.29 milliseconds
8 Characters 5 hours
9 hours 5 days
10 characters 4 months
11 characters 1 decade
12 characters 2 centuries

அவர்கள் எப்படி நமது பாஸ்வேர்டுகளை மில்லி செகண்டில் கண்டறிய முடியும் என்று நிறைய பேர் யோசிப்பீர்கள். உண்மையில் அவர்கள் Keylogging, phishing, extortion மற்றும் பல வித்தியாசமான உத்திகளை கையாண்டு சுலபமாக உங்களுடைய பாஸ்வேர்ட் கண்டுபிடித்துவிடுவார்கள்.
easy to remember password generator

Most used passwords


கடந்த சில ஆண்டுகளில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் மற்றவர்களால் எளிதில் கண்டறியப்பட்ட பாஸ்வேர்டு என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன

123456*
111111
password
qwerty
password 1
picture
test1
iloveyou

இவை எல்லாம் பாஸ்வேர்டா என்று நினைக்காதீர்கள். இவற்றை தான் பரவலாக கடந்த சில வருடங்களாக நிறைய மக்கள் பயன்படுத்திய பாஸ்வேர்டுகள்.

இவ்வளவு எளிமையாக பாஸ்வேர்டுகளை நாம் அக்கவுண்ட்களில் உபயோகித்தால் ஒரு சிறு குழந்தை கூட நமது அக்கௌன்ட் பயன்படுத்த முடியும் என்ற அளவிற்கு உள்ளது. நீங்கள் இவற்றில் ஏதேனும் ஒரு பாஸ்வேர்டை வைத்திருந்தாளோ அல்லது உங்கள் பெயர், உங்கள் மொபைல் நம்பர், பிறந்த நாள், பெற்றோர்களின் பெயர் அல்லது வசிக்கும் ஊரின் பெயர் என இவற்றில் ஏதாவதொன்று வைத்திருந்தாள் முதலில் உங்களுடைய பாஸ்வேர்டை கண்டிப்பாக மாற்றுங்கள்.

Strong password ideas


சரி நாம் எவ்வாறு மிகவும் தனித்துவமான மற்றும் எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்ட்களை கண்டறிவது என்று நினைப்பவர்களுக்கு நாங்கள் இங்கே ரோண்டாமாக பாஸ்வேர்டுகளை உருவாக்கும் மிகச்சிறந்த மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த இணையதளங்களில் லிங் கீழே கொடுத்துள்ளோம்.




மேலே உள்ள இணையதளங்களுக்கு உள்ளே சென்றால் அங்கு உங்களுக்கு Password Length, Lowercase Letters, Uppercase Letters, Symbols, Numbers, Similar Letters மட்டும் இன்னும் சில ஆப்ஷன்ஸ் காட்டப்பட்டிருக்கும். அவைகளை உங்கள் விருப்பம்போல மாற்றி அமைத்து உங்களுக்கு தேவையான பாஸ்வேர்டுகளை சுலபமாக உருவாக்க முடியும்.

Password strength checker


மேலும் உங்களுக்கு நாம் உருவாக்கிய பாஸ்வேர்டு எளிதில் மற்றவர்களால் கண்டறிய முடியும் என்று நீங்கள் கருதினால் அதை கண்டறியவும் ஒரு இணையதளம் ஒன்று உள்ளது.




மேலே உள்ள இளையதளத்தின் உள்ளே சென்று அங்கு நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டை டைப் செய்தால் உங்களுடைய பாஸ்வேர்டு மற்றவர்கள் கண்டறிய குறைந்தது எவ்வளவு நாட்கள் ஆகும் என கூட காட்டும். 

உங்களுடைய அக்கவுண்டை மிகவும் பத்திரமாக வைத்திருக்க, கடினமான அளவிற்கு உங்களுடைய பாஸ்வேர்ட் வைத்திருங்கள். இன்னும் சிறிது எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி வேண்டுமென்றால் two step verification ஐயும் on செய்து வையுங்கள்.

மேற்கண்ட அனைத்தையும் செய்தால் கண்டிப்பாக உங்கள் எல்லா விதமான கணக்குகளும் மிகவும் பத்திரமாக இருக்கும்.

Post a comment

0 Comments